Date:

இலங்கை – நியூசிலாந்து T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

இரவுப் போட்டியாக Mount Maunganui வில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.45க்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 போட்டிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பமாகிய நிலையில் இன்று இடம்பெறவுள்ள போட்டி 26ஆவது போட்டியாகும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், நியூசிலாந்துக்கு எதிராக 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மேலும், நியூசிலாந்தில் 8 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை இன்றைய போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மேலதிகமாக 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவையும் தற்போது விற்று தீர்ந்துள்ளன.

ஒரே நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்க்கக்கூடிய மைதானத்தின் பெரும்பகுதி மைதானத்தில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ஜனவரி 2ஆம் திகதி நெல்சனில் நடைபெறவுள்ள போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...