உள்நாட்டு பால்மா வகைகளின் விலைகளை அதிகரிக்கப்போவதாக மில்க்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து உள்நாட்டு பால்மா உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, அதன் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் விலை அதிகரிப்பு குறித்தான இறுதித் தீர்மானத்தை இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.