அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் நேற்று(08) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.