Date:

மீண்டும் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனம்

ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.

இதனால், பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.

எனினும் இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செயலிழந்தன.

இதனால் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...