பால் மா மீதான நிர்ணய விலை நீக்கப்பட்டது ஒக்டோபர் 7 ஆம் திகதி இரவு மக்கள் அறிந்த விடயமாகவுள்ளது.
பால் மா விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம் 400 கிராம் பால் விற்பனை விலை 550 ரூபாவாக கோரியிருந்தனர்.
இந்நிலையில் பால்மா உற்பத்தி திகதி ஒக்டோபர் 1 என்று குறிப்பிட்டுள்ள சில பால்மா பக்கெட்டுகளில் 550 ரூபாய் என அன்றே அச்சிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மேலும் அரசாங்கத்திற்கும் பால் மா விநியோக கம்பனிகளுக்கும் இடையில் பேசி தீர்மானிக்கப்பட்ட விடங்கள் தான் தற்போது நாடகங்கள் போன்று கட்டம் கட்டமாக வௌியாகிகொண்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.