Date:

பிரபாகரனுக்கு பாடம் கற்பித்தவரின் மகளா? பாடகி யொஹானி

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யொஹானிக்கு வாழ்த்துத் தெரிவித்து சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா அந்தப் பதிவில், “விசேட படையணின் தளபதி என்ற வகையில் உங்கள் தந்தை பிரசன்ன டி சில்வாவை, 2006 ஆம் ஆண்டில் மாவிலாற்றை மீட்பதற்காக வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு அழைத்தேன்.

அதனைத் தொடர்ந்து, விசேட படையணியுடன், பீரங்கி, விமானப்படையின் உதவியுடன் மாவிலாற்று அணைக்கட்டை படையினர் மீட்டெடுத்தனர்.

அன்று மனிதாபிமான காரணங்களைப் போர்க் காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடம் பிரபாகரனுக்குக் கற்பிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Yohani (Singer) Age, Full Name, Religion, Height, Biography & More

அத்தோடு, “பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி, வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறப்புப் படைகளை வழி நடத்தியவர்” என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, இறுதிப்போரில் 55 மற்றும் 59 ஆம் படையணி தளபதியாக முக்கிய பங்களிப்பை அவர் வழங்கினார் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Stream Senehe Ketharam by Yohani | Listen online for free on SoundCloud

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...