2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்களான மரியா ரெஸ்சா (பிலிப்பைன்ஸ்) மற்றும் திமித்ரி முராடோவ் (ரஷ்யா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மேற்படி இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் உயரிய சாதனை புரிபவர்களுக்கு வருடாந்தம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகளவில் மிகவும் கௌரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வே நாட்டில் அறிவிக்கப்படும் அதேவேளை, ஏனைய விருதுகள், சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான நோபல் பரிசு அறிவிப்புகள் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.