Date:

எரிபொருள் தட்டுப்பாடு?

எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு  இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என்றும், தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற...

ஜிந்துப்பிட்டியில் ஐந்துபேர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...