Date:

ஐ.ம.சவின் தேசிய பட்டியலுக்கு தடையுத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வியாழக்கிழமை (12)  பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்தியம் பண்டாரவை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி சாமரி வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியான.நிசாம் காரியப்பரை ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு பெயரிடாமல் தேசியப் பட்டியல் தயாரிப்பதைத் தடுத்து மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பழம்பெரும் பாடகி லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொல இன்று (15)...

ஆயுதங்களுடன் ஜிங்கா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானுக்கு அருகே நேற்று இரவு, 7.0...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...