Date:

உள்ளூராட்சி தேர்தல்: சட்டமா அதிபரிடம் ஆலோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கோரியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏதேனும் சட்டத் தடைகள் இருப்பின் அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணசபை இடைத்தேர்தல் தொடர்பில் முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தால், உடனடியாக அதனை நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழைய வேட்பு மனுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டால், பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக கோரப்பட்டுள்ள  பழைய வேட்பு மனுப் பட்டியலை ரத்து செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தது. அந்த முடிவை அரசாங்கம் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக வேட்புமனுக்கள் கோரப்பட்டன. அதன்படி, 80,672 வேட்பாளர்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளுக்கு இவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சுமார் மூவாயிரம் அரச ஊழியர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்த இவர்களில் சுமார் 8,000 பேர் வெளிநாடு சென்றுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த காலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக அமைச்சுக்கு தகவல் வெளியாகியுள்ளது. எல்பிட்டிய தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் தற்போது ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...