Date:

சம்பந்தனின் இல்லம் கையளிப்பு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர்  கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், சம்பந்தனுக்கு  இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த உத்தியோகபூர்வ இல்லம் டிசெம்பர் 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin தற்பொழுது உள்ள இலங்கை அணிக்கு மாற்றீடாக மற்றும் ஒரு அணி பாகிஸ்தானுக்கு அனுப்பப்படலாம்…

திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ...

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

சாமுத்ரிகா மேக்கப் ஸ்டுடியோ மற்றும் அகாடமி 315 பங்கேற்பாளர்களுடன் இரு பிரிவுகளில்...

Breaking பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப தீர்மானம்?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள்...

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பித்து...