Date:

மஹரகம வாகன விபத்து – ஒருவர் பலி!

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுபுன் சுலோகனா அகலங்க் எனவும் இவர் ஜனாதிபதி செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, ஜீப் வாகன சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...