கலாஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) காலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.