Date:

பெண்டோரா விவகாரம்: திருக்குமரன் நடேசனுக்கு கையூட்டல் ஆணைக்குழு அழைப்பாணை

கையூட்டல் ஆணைக்குழுவில் நாளை (08) முன்னிலையாகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

உலகப் பெரும் புள்ளிகளின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இரகசிய விபரங்களை வெளியிட்ட பெண்டோரா ஆவணத்தில் இலங்கையின் தொழிலதிபரான திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கையூட்டல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க, குறித்த ஆணைக்குழுவினால், பெண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் நாளை காலை 9 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகக் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறுகோரியும் திருக்குமரன் நடேசன் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...