Date:

நாட்டின் மோஷமான காலநிலை தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை!

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290 கிலோமீற்றர் தென்கிழக்கு தொலைவிலும், திசையில் 410 திருகோணமலையிலிருந்து கிலோமீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கத்தினால், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, பலத்த காற்று மற்றும் தாக்கங்களினால் மின்னல் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373