Date:

உ/த பரீட்சைக்கு எதிராக மனு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரியந்த பெர்ணாந்து ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஹன்சனி அழககோன் தாக்கல் செய்த மனுவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் திருமதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் கல்விக்காலம், தொடர்பிலான  39/2023 சுற்றறிக்கையில் உயர்தரப் படிப்புக் காலம் 107 கல்வி நாட்களை நிறைவு செய்ய வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரரான மாணவி, இந்தக் கல்விக் காலத்துக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...