Date:

தந்தையும் மகளும் மூழ்கினர் நீர்கொழும்பு களப்பில்

நீர்கொழும்பு முன்னக்கரை கலப்பு பகுதியில் தோணி- படகு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர். 50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர் தப்பிய 5 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மூவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...