Date:

“4 எம்பிக்களும் திங்களன்றுக்கு முன்பாக பெயரிடப்படும்”

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப் பட்டியல் எம்.பி பதவிகளை வென்றதுடன், இதுவரை ஒரு எம்.பி பதவியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உரிய காலத்தில் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...

Breaking போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்...