நானுஓயா நிருபர்
இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது இதனை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு சனிக்கிழமை (16) மாலை நானுஓயா டெஸ்போட் கிரிமிட்டி ஆலயத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், இனிப்பு பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மூக்கையா பாஸ்கர் இணைந்து கொண்டு தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார் மேலும் குறித்த கொண்டாட்ட நிகழ்வில் குறித்த பகுதிகளில் வசிக்கும் ஏராளமான கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் , ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.