Date:

தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு அமைதியான காலம் அமுலில் இருக்கும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...