தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இரண்டு மணிநேர வேலைநிறுத்தத்தினால் அரசாங்கத்தை மண்டியிட வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்