Date:

யார் இந்த ருஷ்டி நிசார்

ருஷ்டி நிசார் X 18 கொழும்பு மாவட்டம் 

இளம் சட்டமாணி பட்டதாரி (ஐக்கிய இராச்சியம்)

பீஎஸ் அரசறிவியல் & சர்வதேச உறவுகள், ஊடகவியலாளர்/வெளிநாட்டு செய்தியாளர்.

ருஷ்டி நிசார் என்பவர் இலங்கையில் முனைணி ஊடக வலையமைப்புக்களில் பணியாற்றி வரும் திடமான ஊடகத்துறை அனுபவம் மற்றும் தொழில் வாண்மைத்துவம் வாய்ந்ததோர் சர்வதேச ஊடவியலாளராவார்.

அரசறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பட்டதாரியான இவர், ஐக்கிய இராச்சிய சட்டமாணிப் பட்டதாரிச் சான்றிதழையும் பெற்றுள்ளார். இவர் பூகோள மயப்படுத்தப்பட்ட வியாபாரம் மற்றும் அரசியல் பற்றிய புகழ் பூதத “கோல் அப்” (Gall Up) ஆய்வாளராக நான்கு வருடகால அனுபவம் பெற்றவராவார்.

 

ருஷ்டி அரசியல் எழுச்சிகளின் போது எதுவித அச்சமுமின்றி அநீதிகளுக்கெதிராக குரலெழுப்பியுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் உலகளாவிய அரசியலில் மோசமான சூழ்நிகைளில் மக்கள் நலனை மேம்படுத்துவதில் பரந்து பட்ட அறிவு படைத்தவராவார். இவர் சமூக அரசியல் ஆர்வலராகவும் செயற்பட்டு வருகின்றார்.

கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்ற ருஷ்டி, அரசறிவியலை பிரதான பாடமாகக கொண்டு உயர்தர கலைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தார். பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் மற்றும் சர்வதே விவகாரங்களில் தனது இளங்கலை மாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், சம காலத்தில் பக்கிங்ஹாம்ஷயர் புதிய பல்கலைக்கழக சட்டமாணிப் பட்டத்தையும் தனதாக்கிக கொண்டார். தற்போது சட்டத்தரணிகள் சங்க அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணி கற்கை நெறியைப் பயின்று வருகின்றார்.

தொழில்வாண்மைத்துவ ரீதியாக ருஷ்டி நிசார் எமிரேட்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஏ 24 நியூஸ் ஏஜென்சியின் சர்வதேச ஊடக செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஓர் ஊடகவியலாளராவார். ஏ 24 நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தி ணைந் கொள்வதற்கு முன்னர், ருஷ்டி நிசார் யூடிவி (UTV) மீடியா நெட் வேர்க்ஸ் பிரைட்ே லிமிடெட் நிறுவனத்தில் டிஜிட்டல் துறைத் தலவராகவும், கூடவே அதன் பதிபாசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன், லங்கா புவத் லிமிடெட் நிறுவனத்தில மூத்த ஊடகவியலாளராகவும், அரசியல் ஆய்வாளராகவும், ஆலோசகராகவும், ஏசியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரைவேட் லிமிடெட் நிறுவன மூத்த செய்திப் பதிப்பாசிரியராகவும் அரும்பணியாற்றியுள்ளார்.

மிஸ் மூலம்

தொலைபேசி: 076-9056760

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373