Date:

கியூபாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீ தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவிலும் உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில்  மீண்டும் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...