மக்களின் பேராதரவோடு புத்தள மாவட்டத்தில் 2024 – பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில்(NFGG)இலக்கம் ஒன்றில் இரட்டைக் கொடிச் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
இதை சகித்துக் கொள்ள முடியாத சில பெரிய கட்சிகளின் விஷமிகள் பிரிவினைவாத, பிரதேசவாத
பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டார்கள். “புத்தளத்து வாக்குகளை எங்கேயோ இருக்கும் கல்முனை, காத்தான்குடி மக்களுக்குத் தாரை வார்க்கிறார்” என்றெல்லாம் அருவெறுப்பான பிரதேச வாத பொய்ப் பிரச்சாரங்களை கூறி புத்தளம் வாக்காளர்களை அவர்களின் கட்சிக்கு திசை மாற்ற முயற்சித்தார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் நேற்று நவம்பர் 8ம் திகதி, 2024 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG) ஸ்தாபகரும் தலைவருமான அப்துர் ரஹ்மான் அவர்களும் மற்றும் கட்சியின் ஆலோசகர் முகம்மது றஸ்மின் அவர்களும் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் புத்தளம் ஜமியத்தில் உலமா சபையை சந்தித்து தங்களது கட்சிக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் இஷாம் மரிக்காருக்கு வழங்கப்படும் என உறுதியளித்தார்கள்
.
இதன் மூலம் இஷாம் மரிக்காரின் வெற்றி தேர்தலுக்கு முன்னரே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
எப்படியாவது குறைகளைத் தேடி இஷாம் மரிக்காரின் வெற்றியை தடுத்து விட வேண்டும் என்பதை பூதக்கண்ணாடி போட்டுத் தேடிக் கொண்டிருக்கும் விஷமிகளுக்கு இது பேரிடியாக இருக்கும்.
மக்கள் சேவையை மக்களுக்காக நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்து வந்தால் இறைவனின் ஏற்பாடு சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய சான்று…
தேசம் தூய தேசமாக மாறும் நாள் வெகு விரைவில்…..