Date:

”வாக்குறுதிகளை 5 வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது”

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றம் சுமத்துவதாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட அன்றி ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐந்தாண்டுகளில் பூர்த்தி செய்வதாகவும் சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று ஐந்து வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

“நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்காகத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. NPP விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட முன்வைக்கப்பட்டதே தவிர, ஐந்து வாரங்களில் அல்ல. நாங்கள் இன்னும் அரசாங்கத்தையே அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை நாம் எடுத்துள்ளோம். அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது” என அவர் கூறினார்.

நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியதாகவும், இறுதியில் நாட்டை திவாலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும், தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

“நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். பொருளாதாரம் திவாலாவதற்கு முக்கிய காரணம் ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரம், மோசடிகள், ஊழல் மற்றும் விரயம் தான்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...