பதுளை, துன்ஹிந்த, அபகஹஓயா 5 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வார்டில் இருந்து சனிக்கிழமை (02) தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜாஎல அலெக்சாண்டர் மாவத்தையில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே வைத்தியசாலை வார்டில் இருந்து இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.