Date:

முதன்மை பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 1.1 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 0.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் உணவல்லா பணவீக்கம் 0.2 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அது செப்டெம்பர் மாதத்தில் 0.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...