நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய வேண்டுமாயின் அது தொடர்பில் உறுதியான குற்றச்சாட்டு ஒன்று இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கும் பதிலளிகும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.