முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ஜனாதிபதி, அதற்கு இடையில் தனது பேத்தியை சந்திக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது முதல் முறையாக எனது பேத்தியை காண முடிந்தது.
மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.