அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இது இறப்புகள் மற்றும் அபாயத்தை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மருத்துவ தரப்பினர் முன்னெடுத்த இடைக்கால மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மோல்னுபிரவீர் (molnupiravir) என்ற குறித்த மருந்து வில்லை கொவிட் நோயாளர்களுக்கு நாளாந்தம் இரண்டு முறை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது சாதகமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அவசர பயன்பாட்டுக்கான அனுமதிக்காக இந்த மருந்து முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.