Date:

அடுத்து நடக்கப்போவது என்ன? விசேட அறிவிப்பு

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் வீதித் தடைகள் உள்ளதாகவும், எனவே முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119
118
107 (வடக்கு, கிழக்கிற்கு)

011 202 7149
011 201 3243
111 239 9104 – (தொலைநகல் எண்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...