Date:

சஜித்தை அநுர முறியடிப்பார்- ரணில் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.

மஹியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் ஆதரவாளர் (சஜித்) எதிர்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார் என்றும், இதன் மூலம் SJB பிரதான எதிர்க்கட்சியாக தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிடும் என்றும் கூறினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் எனது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. கடந்த காலத்தில் இருமுனைப் போர் மட்டுமே இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும் ஆளும் கட்சி சார்பில் ஒருவரும் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக இருந்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருப்பதால் அது இன்று மாறிவிட்டது” என்று விக்கிரமசிங்க கூறினார்.

“அவர்கள் அனுர மற்றும் சஜித். சஜித்தை அநுர முறியடிப்பார்”.இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர்தான் முன்னணியில் இருப்பவர் என விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...