Date:

அங்கஜன், துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி  துஷ்மந்த ஆகியோர்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களது ஆதரவினை வழங்கினர் .

கொழும்பு, ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளனர் .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு  வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல் உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு  இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார். அங்கஜன் இராமநாதன்  பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .

சாரதி துஷ்மந்த மித்ரபால,  2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்  கேகாலை மாவட்டத்தை  பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு  தெரிவானார். கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

it

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...