தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 700 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.