Date:

ஹக்கீம் அதிரடி: ஒருவரை வெளியேற்றினார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

லுஹர் தொழுகைக்கான  அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த

படங்களை  முகநூலில் பதிவேற்றம் செய்தது ,  விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளினால்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  ,அவரை  கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியின் தலைவர் ஹக்கீம் உடனடி நடவடிக்கையாக யஹியாகானை  நடைபெற்று கொண்டிருந்த உயர்பீட கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீட கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில்  பங்குபற்றகூடாது என இடைநிறுத்துவதாக குறிப்பிட்டார்.

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி  பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்ததோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர்  தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,    அவருடன்                        கைகுலுக்கி ,  முன்மாதிரியான முறையில் யஹியாகான்  அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...