ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிக்க மூன்று நாட்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தமது கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாஸவுடன் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பேசுவார்த்தையை நடாத்தி தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தமது கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடி முழுமையான ஆதரவை வழங்க இணக்கம் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.