Date:

துப்பாக்கி பிரயோகங்களில் பெண்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

amazon college and campusமொனராகலை, நாமல்ஓயா மற்றும் இங்கினியால பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை – நாமல்ஓயா பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை 2.45 அளவிள் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இங்கினியால பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கினியால – நெல்லியந்த பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவரும், 17 வயதான அவரது மகளும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, மொனராகலை – கரடுகல பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி சூடு நடாத்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், 54 வயதான பெண் மற்றும் அவரது 17 வயதான மகள் ஆகியோர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தி கொலை செய்த பின்னர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனக்கு தானே துப்பாக்கி சூடு நடாத்தி உயிரிழத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...