Date:

கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின்  அழைப்பின்பேரில்,   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து  வைக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் ஆலை இத்திட்டமானது 266 மில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரெஞ்சு அபிவிருத்தி வங்கி  ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத்திட்டத்தினூடாக  300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் 80 ஆயிரம் பயணாளர்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துரைத்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் வட மாகாண ஆலுநர் சாள்ஸ் ஆகியோர்களாலௌ வெகு விரைவில் இச்செயற்திட்டத்தை நிறைவுசெய்து கையளித்தமைக்கான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது இது சமவெளி பிரதேசமான யாழ்ப்பாணம், குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தடி நீரிலே பிரதானமாகத் தங்கியுள்ளது. எனினும், அதிகளவு நீர் இறைத்தல், விவசாய இரசாயனப் பாவனை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் குறித்த நிலத்தடி நீர் மாசுபடுகின்றது. தேசியமட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும் போது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது. மேற்கூறிய உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரினைச் சுத்திகரிக்கும் உப்புநீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

தாளையடி கடல் நீரை உப்புநீக்கும் ஆலை செயற்திட்டத்தில், குறைந்த கடல் உப்புத்தன்மைக்காக தளையடியில் அமைந்துள்ள இந்த ஆலை, கடல்நீரில் இருந்து 100% பாதுகாப்பான குடிநீரைத் தயாரிப்பதற்காக மேம்பட்ட RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இலங்கையின் மிகப்பெரிய உப்புநீக்கும் வசதியாக, இது இலத்திரனியல் செயற்பாடு, இரசாயனவியல் மற்றும் நிர்வாக முறைமைகளை ஒன்றிணைத்து, குடிநீர்த் தரத்தை வினைத்திறனுடன் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, தினசரி 24 மில்லியன் லீற்றர் குடிநீரை உற்பத்தி செய்கிறது.

இந்த உப்புநீக்கும் ஆலையிக்கான செலவு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 160 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் வழக்கமான நன்நீர் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 40 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவின் புதிய சுங்கக் கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு

அமெரிக்கா அண்மையில் அறிவித்த புதிய சுங்க வரி கொள்கை தொடர்பாக இலங்கையின்...

இளைஞர்களின் அரசியல் நாட்டிற்கு தேவை – தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது,...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும்...

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

  யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373