Date:

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நெலும் மாவத்தை தலைமையக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.

கட்சித் தலைமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்மானத்தை தம்மிக்க பெரேராவிடம் தெரிவித்த பின்னர், அவர் அதற்கு இணங்கியதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ‘அனித்தா’ நாளிதழ் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளதால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Big Breaking கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெருந்தொகை நிவாரணம் – தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...