Date:

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்!

 

amazon college and campusசுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை புதுப்பொழிவுடன் ஆரம்பித்துள்ளது.

இந் நிகழ்வு 27.07.2024 ம் திகதி காலை 9.30 மணிக்கு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவின் பேராசிரியர் திரு. கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம் அவர்களும் பம்பலபிட்டி பொலீஸ் நிலைய அதிகாரி திரு. அபேரத்ன அவர்களும், இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் அந்தோ தினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த புதிய சேவையின் மூலமாக இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பல பாடநெறிகள் இலகுவாக கற்கக் கூடிய சேவையும் மேலும் நவீன கற்றல் முறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Diploma முதல் HND, Degree, Master, PhD, பாடநெறிகளான Psychology, Teacher Training, Business Management, Caregiver, Childcare Center Operator, English, IELTS, IT ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பயிலுவதற்று பல புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. ஏன்று நிறைவேற்று பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் Amazon College ஆனது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் TVEC (மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு) இல் பதியப்பட்ட நிறுவனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு...

ஒன்றரை கோடி பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காய் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம்...