கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் திருகோணமலையில் வசிக்கும் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு வெடிகுண்டு தயாரிக்க குறித்த நபர் உதவியதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.