வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் இருந்து கடந்த 23ம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரான்பாஸ் பகுதியில் வைத்து நேற்றைய தினம் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரான்பாஸ் மற்றும் கோணவில பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 48 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.