Date:

பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க அனுமதி

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு யோசனை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், 50 கிலோகிராம் நிறைக்கொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...

விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய உறுதி!

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில்...

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02)...

இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...