ஜனாதிபதி வேட்பாளர் வெளியிலிருந்து
வந்தால் கட்சிக்கே பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற மொட்டுக் கட்சியின் கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போதே நாமல் ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
“தேர்தல் குழுக்களை அமைப்பது, அலுவலகங்கள் அமைப்பது, பிரசாரம் செய்வது பற்றி விவாதித்தோம்.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், நாட்டுக்கு பொருத்தமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
