ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அந்த நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளார்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு, தூதரக மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.