Date:

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உருவாக்கம்: தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் இணைந்து தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாக தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு எனும் பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்திருந்தனர். இதில் 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பீரதிநிதிகளும் கையொப்பம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் இதில் அங்கம் பெற்றிருக்கின்றன.

இந் நிகழ்வில் பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...