Date:

4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து தொழிநுட்ப குழு ஒன்றை ஸ்தாபித்துள்ள நிலையில் இந்த குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய, பாடசாலைகள் மீள திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதனால், கொவிட் பரவல் குறைவடைந்த பின்னர் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 3,884 பாடசாலைகளை முதல் கட்டமாக ஆரம்பிக்க உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இரு வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனையடுத்து மாவட்ட, பிரதேச மட்டத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய சாதகமான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க உள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்பின்னர், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பெற்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...