Date:

பங்களாதேஷில் ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள பின்னணியில், அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில் போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

தொலைபேசி இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளையும் வீசியும் ரப்பா் குண்டுகளால் சுட்டும் அவா்களைக் கலைக்க பொலிஸார் முயன்றனா்.

பொலிஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த மோதலில் மட்டும் 22 போ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 105 பே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் 1971-இல் நடைபெற்ற விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்கள், அவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவா் போராட்டம் வெடித்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களதேஷ் உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் திகதி அறிவித்தது.

அதையடுத்து, சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு வழி ஏற்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.

தொடக்கத்தில் அந்தப் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றாலும், போராட்டத்துக்கு எதிராகக் களமிறங்கிய இட ஒதுக்கீடுக்கு ஆதரவான ‘சாத்ரா லீக்’ மாணவா் அமைப்பினா் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.

மேலும், பொலிஸாரும் போராட்டக்காரா்களை ஒடுக்குவதற்காக அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 105 போராட்டக்காரா்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...