Date:

24 மணிநேரம் எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இயங்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ளதால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும்.

இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென்மேற்கு பருவ நிலையால், நாடு முழுவதும் தற்போதைய காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...