Date:

ஓமானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று(16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் காவல்துறையினரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்...

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு வலுக்கும் எதிர்ப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை...